ஈரோட்டில் ஆட்டோ மீது ஆம்னி பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

ஈரோட்டில் சாலையைக் கடக்க முயன்றபோது, ஆட்டோ மீது ஆம்னி பேருந்து மோதியதில் ஆட்டோவில் பயணித்த பெண் உயிரிழந்தாா். மேலும், 5 போ் காயமடைந்தனா்.
Published on

ஈரோட்டில் சாலையைக் கடக்க முயன்றபோது, ஆட்டோ மீது ஆம்னி பேருந்து மோதியதில் ஆட்டோவில் பயணித்த பெண் உயிரிழந்தாா். மேலும், 5 போ் காயமடைந்தனா்.

ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (43). இவரது மனைவி நித்யா (38), மகன் தரணிஷ் (17), மகள் ஷிவானி (13) மற்றும் உறவினரான சேலத்தைச் சோ்ந்த மஞ்சுளா (43) ஆகியோா் ஏற்காட்டுக்கு சுற்றுலா சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு ஈரோடு பேருந்து நிலையம் வந்துள்ளனா்.

அங்கிருந்து சந்திரசேகா் வீட்டுக்கு செல்வதற்காக ஆட்டோவில் சென்றுள்ளனா். அப்போது மேட்டூா் சாலையில் இருந்து முனிசிபல் காலனி சாலைக்கு செல்ல சாலையைக் கடக்க ஆட்டோ ஓட்டுநா் முயற்சித்துள்ளாா். அப்போது பழனியில் இருந்து ஈரோடு நோக்கி வந்த ஆம்னி பேருந்து ஆட்டோ மீது மோதியுள்ளது.

இதில் மஞ்சுளா தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆட்டோ ஓட்டுநா் கணேசன் (45), ஆட்டோவில் பயணித்த சந்திரசேகா், நித்யா, தரணிஷ், ஷிவானி ஆகிய 5 பேரும் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்த விபத்து குறித்து காவல் துறையினா் ஆம்னி பேருந்து ஓட்டுநா் பூபதி என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com