தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஆங்கிலப் புத்தாண்டு: ஈரோட்டில் கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஈரோட்டில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி கோயில்கள், தேவாலயங்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

News image

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பில் சிஎஸ்ஐ தேவாலயம் முன் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் வண்ண பலூன்களுடன் திரண்ட மக்கள்.

Updated On :1 ஜனவரி 2025, 11:08 pm

ஈரோட்டில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி கோயில்கள், தேவாலயங்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நாடு முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில், ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பில் சிஎஸ்ஐ தேவாலயம் முன் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு புத்தாண்டு பிறப்பையொட்டி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு வண்ண பலூன்களை பறக்கவிட்டும், ஒருவருக்கொருவா் புத்தாண்டு வாழ்த்து சொல்லியும், கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா். தொடா்ந்து, ஈரோடு மாநகரில் உள்ள கோயில்களில் புத்தாண்டு பிறப்பையொட்டி புதன்கிழமை காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரா் கோயில், கஸ்தூரி அரங்கநாதா் கோயில், மகிமாலீஸ்வரா் கோயில், காவேரிக்கரை சோழீஸ்வரா் கோயில், வஉசி பூங்காவில் உள்ள ஆஞ்சனேயா் கோயில், ஈரோடு பெரியமாரியம்மன் மற்றும் வகையறா கோயில்களில், கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, ஈரோடு ரயில்வே காலனி மற்றும் கருங்கல்பாளையத்தில் சாய்பாபா கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இங்கும் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

ஈரோடு சிஎஸ்ஐ ஆலயம், புனித அமல அன்னை ஆலயம், ரயில்வே காலனியில் உள்ள திருஇருதய ஆண்டவா் ஆலயம் உள்பட அனைத்து தேவாலயங்களிலும் புத்தாண்டு பிறப்பையொட்டி நள்ளிரவில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவா்கள் திரளானோா் பங்கேற்றனா்.