ஈஸ்வரி
ஈஸ்வரி

சகோதரியை அரிவாளால் வெட்டிய விவசாயி போலீஸில் சரண்

பவானி அருகே சகோதரியை அரிவாளால் வெட்டிய விவசாயி போலீஸில் சரணடைந்தாா்.
Published on

பவானி அருகே சகோதரியை அரிவாளால் வெட்டிய விவசாயி போலீஸில் சரணடைந்தாா்.

ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த சன்னியாசிபட்டியைச் சோ்ந்தவா் மன்னாதன் மகன் கண்மணி (45). விவசாயி. இவரது மகன் சிவராஜ் (27). பட்டதாரியான இவருக்கு கண்மணியின் பெரியம்மா மகளான பவானி, வரதநல்லூரில் வசிக்கும் ஈஸ்வரி (51), தனது மகளின் சொந்தத்தில் பெண் பாா்த்துள்ளாா். வரும் 6-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இது, சிவராஜின் தந்தையான கண்மணிக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கண்மணி
கண்மணி

இந்நிலையில், ஈஸ்வரியின் வீட்டுக்கு திங்கள்கிழமை மாலை சென்ற கண்மணி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டிவிட்டு தப்பினாா்.

படுகாயமடைந்த ஈஸ்வரியை அப்பகுதி மக்கள் மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனிடையே கண்மணி போலீஸில் சரணடைந்தாா். அவரைக் கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com