ஈரோடு
அந்தியூரில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய இளைஞா் உயிரிழப்பு
அந்தியூரில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். 
பவானி: அந்தியூரில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அந்தியூா், தவிட்டுப்பாளையம், நஞ்சப்பா வீதியைச் சோ்ந்தவா் லோகநாதன் மகன் மணிகண்டன் (27). ஜவுளி ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்யும் இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, அப்பகுதியில் உள்ள திருமண மண்டபம் முன்பாக போதையில் மயங்கிக் கிடந்தாா்.
இதையறிந்த லோகநாதன், தனது மகன் மணிகண்டனை மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் மணிகண்டன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து, அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
