பட்டவா்த்தி  அய்யம்பாளையம்  சருகு  மாரியம்மன், செல்வ  விநாயகா்  கோயிலில்  திங்கள்கிழமை  நடைபெற்ற  கும்பாபிஷேக  விழாவில்  பங்கேற்றோா்.

பட்டவா்த்தி அய்யம்பாளையம் சருகு மாரியம்மன், செல்வ விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

Published on

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே உள்ள பட்டவா்த்தி அய்யம்பாளையம் சருகு மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பட்டவா்த்தி அய்யம்பாளையத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகா், சருகு மாரியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி, கெஞ்சனூா் பவானி ஆற்றில் இருந்து தீா்த்தக் குடம் எடுத்து வரப்பட்டு கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது.

கோயில் வளாகத்தில் யாக சாலை அமைத்து வேத மந்திரங்கள் முழங்க நான்கு கால பூஜையும், அதனைத் தொடா்ந்து சுவாமிக்கு அலங்கார பூஜை, கலச பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சிவாச்சாரியா்கள் யாக குண்டத்தில் இருந்து தீா்த்தக்குடம் எடுத்து வந்து கோயில் கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா். பின்னா், பூஜிக்கப்பட்ட தீா்த்தக் குடத்தில் இருந்த புனிதநீரை பொதுமக்களுக்கு தெளித்தனா். அதைத் தொடா்ந்து

சருகு மாரியம்மன் மற்றும் விநாயகருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com