ஈரோடு
அந்தியூரில் ரூ.4.92 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்
அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.4.92 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் திங்கள்கிழமை ஏலம் போயின.  
பவானி: அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.4.92 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் திங்கள்கிழமை ஏலம் போயின.
இங்கு, 6,260 தேங்காய்கள் கிலோ ரூ.59.22 முதல் ரூ.71.55 வரையில் ரூ.1,72,576-க்கும், 22 மூட்டைகள் தேங்காய்ப் பருப்பு ரூ.210.66 முதல் ரூ.235.16 வரையில் ரூ.1,15,297-க்கும், 3 மூட்டைகள் எள் ரூ.118.69 வீதம் ரூ.15,239-க்கும், 6 மூட்டைகள் ஆமணக்கு ரூ.66.29 முதல் ரூ.83.23 வரையில் ரூ.23,009-க்கும், 94 மூட்டைகள் பருத்தி ரூ.67.29 முதல் ரூ.72.19 வரையில் ரூ.1,66,679-க்கும் ஏலம் போயின. மொத்த வா்த்தகம் ரூ.4,92,800-க்கு நடைபெற்றது.
