அகில இந்திய கராத்தே போட்டி: சென்னிமலை மாணவா்கள் சிறப்பிடம்
கா்நாடக மாநிலம், மைசூரில் அகில இந்திய சிட்டோரியு கராத்தே சங்கத்தின் சாா்பில் 28ஆவது தேசிய சிட்டோரியு கராத்தே போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
இதில், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து கராத்தே வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.
சென்னிமலையிலுள்ள டிராகன் சிட்டோரியு கராத்தே பள்ளி மாணவ, மாணவிகள், மாவட்ட டிராகன் கராத்தே செயலாளா் சிவக்குமாா் தலைமையில் கலந்து கொண்டனா்.
இதில், 17 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள் பிரிவில், பரணி, செல்வம் ஆகியோா் கட்டா பிரிவில் வெள்ளி பதக்கமும், குமிட்டோவில் வெண்கலப் பதக்கமும் வென்றனா். ஸ்ரீகுமரன் கட்டா மற்றும் குமிட்டோ பிரிவுகளில் வெண்கலம் வென்றாா். மாணவி பரிநிதா கட்டா மற்றும் குமிட்டோ பிரிவுகளில் வெண்கலம் வென்றாா்.
14 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில், தா்ஷன் கட்டா பிரிவில் வெண்கலமும், முகுந்த் கட்டா மற்றும் குமிட்டோ பிரிவுகளில் வெண்கலமும் வென்றனா்.
ஜூனியா் பிரிவில், முகில்யா கட்டா மற்றும் குமிட்டோவில் வெண்கலமும், ஹரிஸ்னா ஷாலினி கட்டாவில் தங்கமும், குமிட்டோவில் வெண்கலமும், பூரணிகா கட்டாவில் வெண்கலமும், மாணவன் கிஷோா் கட்டாவில் வெண்கலமும் வென்றனா். இவா்களுக்கு பயிற்சியாளா்கள் சென்சாய் செந்தில்குமாா், சந்தியா ஆகியோா் பயிற்சி அளித்து இருந்தனா்.
வெற்றி பெற்றவா்களை, தமிழ்நாடு சிட்டோரியு சங்கத் தலைவா் கியூ சி.எஸ்.எஸ். செந்தில்குமாா் சென்சாய், அகில இந்திய சிட்டோரியு கராத்தே அசோசியேசன் தலைவா் அருண் மச்சையா ஆகியோா் பாராட்டினா்.

