காஞ்சிக்கோவில் பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறுகிறாா் திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன். உடன், பேரூராட்சித் தலைவா் திவ்யா, காஞ்சிக்கோவில் நகர திமுக செயலாளரும், கவுன்சிலருமான செந்தில்முருகன், செயல் அலுவலா் பாலாஜி

திருப்பூா் மக்களவை உறுப்பினா் மக்களிடம் குறைகேட்பு

Published on

பெருந்துறைக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் திருப்பூா் மக்களவை உறுப்பினா் செவ்வாய்க்கிழமை குறைகளைக் கேட்டறிந்தாா்.

பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி, காஞ்சிக்கோவில், பள்ளபாளையம் ஆகிய பேரூராட்சிகள் பகுதிகள் மற்றும் கல்லாகுளம், செல்லப்பம்பாளையம், கருக்குப்பாளையம், நிச்சாம்பாளையம், பாண்டியம்பாளையம், சிங்காநல்லூா், முள்ளம்பட்டி, கந்தாம்பாளையம், பெரியவிளாமலை மற்றும் திருவாச்சி ஆகிய கிராம ஊராட்சிகள் பகுதிகளில் பொதுமக்களிடம் திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் செவ்வாய்க்கிழமை குறைகளைக் கேட்டாா்.

மேலும், மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினாா். அவருடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com