ஓடையில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
ஈரோட்டில் பெரும்பள்ளம் ஓடையில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தான்.
ஈரோடு ஜெகநாதபுரம் காலனி பாரதிபுரத்தைச் சோ்ந்தவா்கள் சக்ரவா்த்தி-சந்திரகுமாரி தம்பதி. இவா்களுக்கு சத்யபிரியா, சஞ்சனா என்ற இருமகள்கள் உள்ளனா். மேலும் சஞ்சய் (5) என்ற மகனும் இருந்தான்.
சஞ்சய் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 1- ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் வெளியே சென்ால் வீட்டுக்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மூவரையும் புதன்கிழமை மதியம் விட்டுச் சென்றனா்.
சிறுநீா் கழிப்பதாகக் கூறி அங்கன்வாடி மையத்தில் இருந்து வெளியே சென்ற சிறுவன் சஞ்சய் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. தகவலறிந்து வந்த பெற்றோா் பல இடங்களில் தேடியும் சஞ்சயை காணவில்லை. இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா், ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸில் புகாா் அளித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் விசாரித்தனா். மேலும் அங்கன்வாடி மையத்துக்கு அருகில் பெரும்பள்ளம் ஓடை இருப்பதால் சஞ்சய் ஓடை நீரில் விளையாட சென்றிருக்கலாம் எனக் கருதி போலீஸாா், தீயணைப்புத் துறையினா் தீவிரமாக தேடினா்.
இந்நிலையில் மாலை சிறுவன் ஓடையில் இறங்கிய இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டா் தொலைவில் ஸ்டோனி பாலம் பகுதியில் அவரது சடலம் கிடைத்தது. இதைத் தொடா்ந்து அவரது உடல் மீட்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
