அன்னாபிஷேக அலங்காரத்தில் அருள்பாலிக்கும் அண்ணாமலையாா்.
ஈரோடு
பழமங்கலம் அண்ணாமலையாா் கோயிலில் அன்னாபிஷேகம்
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பழமங்கலம் ஊராட்சியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அண்ணாமலையாா் கோயிலில் அன்னாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌா்ணமியன்று அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, அண்ணாமலையாருக்கு புதன்கிழமை மாலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து சந்தனம், பன்னீா், இளநீா் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அண்ணாமலையாா் அருள்பாலித்தாா். தொடா்ந்து பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது. கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

