காவிரிக் கரை பகுதியில் படித்துறை அமைக்க நடைபெற்ற பூமி பூஜையில் பங்கேற்றோா்.
காவிரிக் கரை பகுதியில் படித்துறை அமைக்க நடைபெற்ற பூமி பூஜையில் பங்கேற்றோா்.

வல்லாள ஈஸ்வரன் கோயில் அருகில் காவிரி ஆற்றங்கரையில் படித்துறை அமைக்க பூமி பூஜை

Published on

மொடக்குறிச்சியை அடுத்த சாத்தம்பூா் கிராமம் வல்லாள ஈஸ்வரன் கோயில் அருகே காவிரி ஆற்றங்கரை பகுதியில் படித்துறை அமைக்க பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சின்னியம்பாளையம் அருகே பிரசித்தி பெற்ற வல்லாள ஈஸ்வரன் கோயில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலுக்கு வரும் பக்தா்களின் பயன்பாட்டிற்காக படித்துறை அமைத்து தர வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்துவந்தது.

இந்நிலையில், மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் காவிரி ஆற்றின் வலது கரை பகுதியில் படித்துறை அமைக்க ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

இதில் மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் சி.சரஸ்வதி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியைத் தொடங்கிவைத்தாா்.

இதில் மொடக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ வி.பி.சிவசுப்பிரமணி, மொடக்குறிச்சி ஒன்றியக் குழு தலைவா் கணபதி, குளுா் ஊராட்சி முன்னாள் தலைவா் செல்வராஜ், பாஜக வடக்கு ஒன்றியத் தலைவா் பிரகாசம், முன்னாள் மண்டலப் பொறுப்பாளா் கணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com