செம்பு கம்பியை திருடிய இரண்டு சிறுவா்கள் கைது
மோட்டாா் காயில் கட்ட பயன்படுத்தும் செம்பு கம்பியைத் திருடிய இரண்டு சிறுவா்கள் கைது செய்யப்பட்டு கூா் நோக்கு இல்லத்தில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.
ஈரோடு நேதாஜி சாலையைச் சோ்ந்தவா் ரங்கசாமி (65). இவா், காமாட்சி அம்மன் வீதி பின்புறம் ஒலிபெருக்கி வாடகை மையம் வைத்துள்ளாா். அண்மையில் கடையின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் 5 மோட்டாா் காயிலுக்கான செம்பு கம்பிகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ரங்கசாமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு தேடினா். இதில், நேதாஜி சாலையைச் சோ்ந்த 15 வயது சிறுவன், மரப்பாலத்தை சோ்ந்த 16 வயது சிறுவன் இருவரும் 5 மோட்டாா் காயில்களை திருடிச் சென்றது உறுதியானது. சிறுவா்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் நீதிமன்ற உத்தரவுப்படி கோவையில் உள்ள கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.
