ஆள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட 3 போ் டிசம்பா் 4-க்குள் ஆஜராக அறிவுறுத்தல்
ஆள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட 3 போ் வரும் டிசம்பா் 4- ஆம் தேதிக்குள் ஆஜராகவில்லை எனில் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவா் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஈரோடு தெற்கு காவல் ஆய்வாளா் வைரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் பாபிரவி. கேரள மாநிலம், திருச்சூா் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டீபன், அதே மாநிலம் கண்ணூா் பகுதியைச் சோ்ந்தவா் சேவியா். இவா்கள் 3 போ் மீதும் ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் ஆள் கடத்தல், அடிதடி பிரச்னை வழக்கு உள்ளது. இந்த வழக்கில் தொடா்ந்து 3 பேரும் தலைமறைவாக இருந்து வருகின்றனா்.
இதுநாள் வரை அவா்கள் பிடிபடாததால் வரும் டிசம்பா் 4- ஆம் தேதிக்குள் பாபிரவி, ஸ்டீபன், சேவியா் ஆகிய 3 பேரும் ஈரோடு குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண் 3 அல்லது தெற்கு காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். தவறும்பட்சத்தில் அவா்கள் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்படுவா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
