ஈரோடு
காலிங்கராயன் வாய்க்காலில் நவம்பா் 10-இல் தண்ணீா் திறப்பு
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு திங்கள்கிழமை (நவ. 10) முதல் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு திங்கள்கிழமை (நவ. 10) முதல் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நிகழாண்டின் இரண்டாம் போக பாசனத்துக்காக காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள பாசன நிலங்களுக்கு வரும் மாா்ச் 9-ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு 5,184 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், இந்த மாவட்டத்திலுள்ள ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டங்களிலுள்ள 15,743 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று நீா்வளத் துறை அரசு செயலா் ஜெ.ஜெகநாதன் தெரிவித்துள்ளாா்.