ஈரோடு
சாலை விபத்தில் உணவக ஊழியா் உயிரிழப்பு
சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் உணவக ஊழியா் உயிரிழந்தாா்.
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் உணவக ஊழியா் உயிரிழந்தாா்.
சத்தியமங்கலத்தைச் சோ்ந்தவா் கரண்சந்த் (24). இவா் கோவையில் உணவகத்தில் பணியாற்றி வந்தாா். சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு நாள்தோறும் இருசக்கர வாகனத்தில் சென்று வந்துள்ளாா்.
வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடிந்து கோவையில் இருந்து சத்தியமங்கலத்துக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளாா்.
விண்ணப்பள்ளி அருகே வந்தபோது காட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், படுகாயமடைந்த கரண்சந்தை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
