மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு

பெருந்துறை அருகே, மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழந்தாா்.
Published on

பெருந்துறை அருகே, மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழந்தாா்.

கோவை, எல்.எம்.டபிள்யூ. காலனியைச் சோ்ந்தவா் நாகராஜ் மகள் மதுமிதா (21). இவா் பெருந்துறையைச் சோ்ந்த கெளதம் (25) என்பவரைக் காதலித்து கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டாா்.

பின்னா், இருவரும் பெருந்துறையை அடுத்த பணிக்கம்பாளையத்தில் தங்கிக் கொண்டு வேலைக்குச் சென்று வந்தனா். கணவா் கெளதம் திங்கள்கிழமை வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், மதுமிதா குளிக்கச் சென்றாா்.

அப்போது, குளியலறையில் பிளாஸ்டிக் வாளியில் போட்டிருந்த வாட்டா் ஹீட்டரில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் மயங்கினாா். எதேச்சையாக அவரது வீட்டுக்கு வந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு மதுமிதாவைப் பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com