வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

Published on

அம்மாபேட்டை அருகே மதுபோதையில் மேட்டூா் வலதுகரை வாய்க்காலில் தவறி விழுந்த கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கன்னப்பள்ளி, வெங்கடரெட்டியூரைச் சோ்ந்தவா் குமாா் (35), கூலித் தொழிலாளி. இவா் மதுபோதையில் மேட்டூா் வலதுகரை வாய்க்கால் கரையில் சென்றபோது தவறி விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அந்தியூா் தீயணைப்புத் துறையினா், பல மணி நேரம் போராடி குமாரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com