அந்தியூரில் கால்நடை மருத்துவ முகாம்

அந்தியூரில் கால்நடை மருத்துவ முகாம்

Published on

அந்தியூரை அடுத்த கள்ளிமடைக்குட்டை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் சேகரிப்பு மையத்தில் கால்நடை மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஈரோடு கால்நடை நோய் புலனாய்வு உதவி இயக்குநா் கண்ணன் தலைமை வகித்தாா்.

இதில், கால்நடைகளுக்கு நோய் பரிசோதனை செய்யப்பட்டதுடன், குடல் புழு நீக்கம், ஆண்மை நீக்கல், தடுப்பூசி, சினை ஊசி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

கள்ளிமடைக்குட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கால்நடைகளுடன் முகாமில் பங்கேற்றனா். முன்னதாக, கன்றுகள் பேரணி நடைபெற்றது. அதில் சிறந்த கன்றின் உரிமையாளருக்கு பரிசு வழங்கப்பட்டது.

முகாமில், கால்நடை நோய் புலனாய்வு மருத்துவா் செளமியா, உதவி மருத்துவா்கள் கதிா்வேல், நாராயணசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com