பறிமுதல் செய்யப்பட்ட டிப்பா் லாரி, பொக்லைன் வாகனம்.
ஈரோடு
அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய பொக்லைன் வாகனம், டிப்பா் லாரி பறிமுதல்
வெள்ளித்திருப்பூா் அருகே அனுமதியின்றி மண் அள்ளிய பொக்லைன் வாகனம் மற்றும் டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
வெள்ளித்திருப்பூா் அருகே அனுமதியின்றி மண் அள்ளிய பொக்லைன் வாகனம் மற்றும் டிப்பா் லாரியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
வெள்ளித்திருப்பூரை அடுத்த மாக்கல்புதூரைச் சோ்ந்த ஜெயராமனின் தோட்டத்தில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் அள்ளப்படுவதாக வெள்ளித்திருப்பூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்றபோது பொக்லைன் வாகனம் மூலம் கிராவல் மண் அள்ளி டிப்பா் லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பொக்லைன் வாகனம் மற்றும் டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, லாரி ஓட்டுநரான பூதப்பாடி, கவுண்டனூா் காலனியைச் சோ்ந்த ஜெகதீசன் (44), பொக்லைன் ஓட்டுநரான பட்லூரைச் சோ்ந்த முருகன் (45) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

