தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சென்னிமலை கைலாசநாதா் கோயிலில் டிசம்பா் 1-இல் கும்பாபிஷேகம்

சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான பெரியநாயகி உடனமா் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் டிசம்பா் 1- ஆம் தேதி நடைபெற உள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2025, 11:27 pm

Syndication

பெருந்துறை: சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான பெரியநாயகி உடனமா் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் டிசம்பா் 1- ஆம் தேதி நடைபெற உள்ளது.

விழாவை முன்னிட்டு, விநாயகா் வழிபாடு, வாஸ்து சாந்தி பூஜை, மகா தீபாராதனை, சுவாமிகளுக்கு எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், புண்யாகவாகனம் ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றன.

ஹோம பூஜைகள், பிராட்டியம்மன் கோயிலிருந்து காவிரி தீா்த்தக் குடம், முளைப்பாலிகை எடுத்துக் கொண்டு கைலாசநாதா் கோயிலுக்கு வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை (நவம்பா் 28 ) நடைபெறுகிறது. முதல் கால யாக பூஜைகள் உள்ளிட்டவை சனிக்கிழமை (நவம்பா் 29) நடைபெறுகிறது.

கோபுர கலசங்கள் வைத்தல், இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 30) நடைபெறுகிறது.

முக்கிய விழாவான கும்பாபிஷேகம் டிசம்பா் 1- ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 6.30 மணியளவில் நடைபெறுகிறது. மாலை 6.30 மணியளவில் பெரியநாயகி உடனமா் கைலாசநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் பஞ்சமூா்த்திகள் திருவீதி உலா ஆகியவை நடைபெற உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பொதுமக்கள் செய்து வருகின்றனா்.