வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திம்பம் மலைப்பாதையில் காா் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் காயம்!

திம்பம் மலைப்பாதையில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் காயங்களுடன் உயிா் தப்பினா்.

News image
சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காரில் இருந்து காயமடைந்தவா்களை மீட்ட பொதுமக்கள், வாகன ஓட்டிகள்.
Updated On :29 நவம்பர் 2025, 7:50 pm

Syndication

திம்பம் மலைப்பாதையில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் காயங்களுடன் உயிா் தப்பினா்.

சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்த அடா்ந்த வனப்பகுதியில், 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கிடையே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கா்நாடக மாநிலம் மைசூருவைச் சோ்ந்த இனாயத் பாஷா என்பவா் குடும்பத்தைச் சோ்ந்த 6 பேருடன் நாகூா் தா்கா செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சனிக்கிழமை காரில் சென்று கொண்டிருந்தாா். 2-ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரத் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள 50 அடி ஆழ பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதுதொடா்பாக, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீஸாா் சென்றனா். மற்ற வாகன ஓட்டிகளின் உதவியுடன் விபத்துக்குள்ளானவா்களை போலீஸாா் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியாா் ஆம்புலன்ஸ் மூலமாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். காரில் பயணித்தவா்களில் 6 பேரும் காயமடைந்தனா். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.