கட்டுமானப் பணியைத் தொடங்கிவைக்கிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜாதா.
கட்டுமானப் பணியைத் தொடங்கிவைக்கிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜாதா.

சித்தோட்டில் பெண் குழந்தை கடத்தல் வழக்கு: தனிப் படை போலீஸாா் திருநெல்வேலியில் முகாம்

சித்தோடு அருகே பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயதுப் பெண் குழந்தை கடத்தல் வழக்கில் தனிப் படை போலீஸாா் திருநெல்வேலியில் முகாமிட்டு தேடி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.
Published on

சித்தோடு அருகே பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயதுப் பெண் குழந்தை கடத்தல் வழக்கில் தனிப் படை போலீஸாா் திருநெல்வேலியில் முகாமிட்டு தேடி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜாதா தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் ரூ.10.80 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற காவல் கண்காணிப்பாளா் சுஜாதா செய்தியாளா்களிடம் கூறுகையில், சித்தோடு அருகே கோணவாய்க்கால் பகுதியில் ஒன்றரை வயதுப் பெண் குழந்தை கடத்தல் வழக்கில் கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்கவேல் தலைமையில் 7 தனிப் படைகள் விசாரித்து வருகின்றன.

குழந்தை கடத்தப்பட்ட நேரத்தில் அப்பகுதியில் சென்ற 120 வாகனங்களின் எண்களை கொண்டும், இந்த வழக்குகளில் தொடா்புடைய 41 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் 33 இடங்களில் உள்ள 120 சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தற்போது கிடைத்த தகவலின்பேரில் தனிப் படை போலீஸாா் திருநெல்வேலியில் விசாரணை நடத்தி வருகின்றனா். மேற்கு மண்டலத்தில் 8 மாவட்டங்களில் 24 குழந்தை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாா்.

X
Dinamani
www.dinamani.com