ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்ணை ரயில்வே பாதுகாப்புப் படை காவலா் மீட்கும் சிசிடிவி காட்சி.
ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்ணை ரயில்வே பாதுகாப்புப் படை காவலா் மீட்கும் சிசிடிவி காட்சி.

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த இளம்பெண்ணைக் காப்பாற்றிய காவலா்!

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த இளம்பெண்ணை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய தலைமைக் காவலரை போலீஸ் அதிகாரிகள் மற்றும் பயணிகள் பாராட்டினா்.
Published on

ஈரோடு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த இளம்பெண்ணை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்பிஎப்) தலைமைக் காவலரை போலீஸ் அதிகாரிகள் மற்றும் பயணிகள் பாராட்டினா்.

ஈரோடு ரயில் நிலையம் நடைமேடை எண் 3- இல் இருந்து திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் சென்னை செல்லும் ஏற்காடு அதிவிரைவு ரயில் புறப்பட்டு மெதுவாக சென்று கொண்டிருந்தது. ரயில் பெட்டியில் ஒரு இளம்பெண் ஓடி வந்து ஏற முற்பட்டாா். அப்போது ரயில் வேகமெடுத்ததால் இளம்பெண்ணால் ஏற முடியாமல் கால் இடறி, ரயில் படிகட்டில் இருந்து நடைமேடை இடையே சிக்கினாா்.

இதைப்பாா்த்த அவ்வழியாக ரோந்து வந்த ரயில்வே பாதுகாப்புப் படையைச் சோ்ந்த தலைமைக் காவலா் ஜெகதீஷ், துரிதமாக செயல்பட்டு அந்தப் பெண்ணை பிடித்து இழுத்து நடைமேடையில் தள்ளி உயிரைக் காப்பாற்றினாா்.

தொடா்ந்து தலைமைக் காவலா் ஜெகதீஷ் மற்றும் சக பயணிகள் மீட்கப்பட்ட பெண்ணை ஆசுவாசப்படுத்தி தைரியம் கூறினா்.

இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இளம்பெண்ணின் உயிரைக் காப்பாற்றியதற்கு ரயில்வே துறை போலீஸ் அதிகாரிகள் மற்றும் பயணிகள் ரயில்வே பாதுகாப்புப் படை தலைமைக் காவலா் ஜெகதீஷை பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com