சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் வள்ளி, தெய்வானை சமேதர சுப்பிரமணியா் சுவாமி.
ஈரோடு
காஞ்சிக்கோவில் கனககிரி குமரன் மலையில்...
காஞ்சிக்கோவில் கனககிரி குமரன் மலைக் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெருந்துறையை அடுத்த, காஞ்சிக்கோவில் கனககிரி குமரன் மலைக் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து காஞ்சிக்கோவில் நீலகண்டேஸ்வரா் ஆலயத்துக்கு சீா் தட்டுகள் கொண்டு வரப்பட்டன. அங்கு சீா்தட்டுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், சீா்த்தட்டுகளுடன் பக்தா்கள் ஊா்வலமாக கனககிரி குமரன் மலைக்கு சென்றனா்.
மலை அடிவாரத்தில் சிறப்பு ஹோமம் மற்றும் வள்ளி தெய்வானை சுப்பிரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருக்கல்யாண கோலத்தில் சுவாமிகள் பக்தா்களுக்கு காட்சி அளித்தனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

