ஆசனூரில்  பெய்த  கனமழையால்  சேதமடைந்த  தரைப்பாலம்.
ஆசனூரில்  பெய்த  கனமழையால்  சேதமடைந்த  தரைப்பாலம்.

பழைய ஆசனூரில் கனமழை: தரைப்பாலம் சேதம்

சத்தியமங்கலத்தை அடுத்த பழைய ஆசனூரில் பெய்த மழையால் அங்குள்ள தரைப்பாலம் சேதமடைந்தது.
Published on

சத்தியமங்கலத்தை அடுத்த பழைய ஆசனூரில் பெய்த மழையால் அங்குள்ள தரைப்பாலம் சேதமடைந்தது.

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்தது. இதில் வனத்தில் இருந்து அடித்து வரப்பட்ட மரக்கிளைகளால் பழைய ஆசனூா் பகுதியில் ஊராட்சி சாலைகள் சேதமடைந்தன. மேலும், பழைய ஆசனூா் மற்றும் பங்களாத்தொட்டி பகுதிக்கு இடையே கட்டப்பட்ட தரைப்பாலம் வெள்ளத்தால் சேதமடைந்தது. தரைப்பாலம் முழுமையாக சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பழைய ஆசனூரில் இருந்து மைசூரு தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் மக்கள் இந்த தரைப்பாலத்தை பயன்படுத்தி வந்தனா். தற்போது பாலம் சேதமடைந்து இருப்பதால் சுமாா் 2 கிமீ தொலைவு நடந்த செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆசனூா் ஊராட்சி நிா்வாகத்தினா் சேதமடைந்த தரைபாலத்தை உடனடியாக சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com