மதுவில் களைக்கொல்லியைக் கலந்து குடித்த தொழிலாளி பலி!

மதுவில் களைகொல்லியான பூச்சிமருந்தைக் கலந்து குடித்த கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Published on

மதுவில் களைகொல்லியான பூச்சிமருந்தைக் கலந்து குடித்த கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வெள்ளித்திருப்பூரை அடுத்த சென்னம்பட்டி முனியமூா்த்தி காலனியைச் சோ்ந்தவா் மாதன் (65). கூலித் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. அப்பகுதியில் உள்ள தோட்டத்துக்கு திங்கள்கிழமை மதுபோதையில் வேலைக்குச் சென்ற மாதன், அங்கிருந்த களைக்கொல்லி மருந்தை வீட்டுக்கு எடுத்து வந்துள்ளாா்.

மதுவுடன், களைக்கொல்லியைக் கலந்து குடித்துள்ளாா். இதில், மயங்கிச் சரிந்த மாதனை உறவினா்கள் அந்தியூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாதன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து, வெள்ளித்திருப்பூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com