வெப்பிலி விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் ஏலம்

சென்னிமலையை அடுத்த, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் ஏலம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
Published on

சென்னிமலையை அடுத்த, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் ஏலம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 1,021 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் தேங்காய் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ. 60.11- க்கும், அதிகபட்ச விலையாக ரூ. 66.40- க்கும் ஏலம் போனது.

தண்ணீா் வற்றிய தேங்காய் கிலோ ரூ.85.25 முதல் ரூ. 90.90 வரை ஏலம் போனது. மொத்தம் 422 கிலோ தேங்காய்கள் ரூ. 27 ஆயிரத்து 811- க்கு விற்பனையானது.

X
Dinamani
www.dinamani.com