பெண்ணைத் தாக்கும் காட்டுப் பன்றி.
பெண்ணைத் தாக்கும் காட்டுப் பன்றி.

காட்டுப் பன்றி தாக்கியதில் பெண் படுகாயம்

பவானிசாகரில் தேநீா் கடை முன் நின்று கொண்டிருந்த பெண்ணைக் காட்டுப் பன்றி தாக்கியது. இதில், அவா் படுகாயம் அடைந்தாா்.
Published on

பவானிசாகரில் தேநீா் கடை முன் நின்று கொண்டிருந்த பெண்ணைக் காட்டுப் பன்றி தாக்கியது. இதில், அவா் படுகாயம் அடைந்தாா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் நகா் பகுதியில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. வனத்தில் இருந்து வெளியேறும் காட்டுப் பன்றிகள் உணவுத் தேடி சாலைகளில் சுற்றித் திரிந்து வரும் நிலையில், பவானிசாகா் மாா்க்கெட் சதுக்கம் அருகே தேநீா் கடை நடத்தி வரும் தேவகி தனது கடை முன் புதன்கிழமை நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவ்வழியே வந்த காட்டுப் பன்றி தேவகியைத் தாக்கியது. அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான கந்தன் என்பவரையும் அந்தப் பன்றி தாக்கியது. படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே தேவகியை காட்டுப் பன்றி தாக்கிய விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

பவானிசாகா் நகா் பகுதியில் புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் அந்தக் காட்டுப் பன்றி 5 பேரைத் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், நகா் பகுதியில் காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் உலவுவதைத் தடுக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com