பருவமழையில் தென்னை மரங்களைப் பாதுகாக்க தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தல்

பருவமழை காலத்தில் தென்னை மரங்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்க விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தி உள்ளது.
Published on

பருவமழை காலத்தில் தென்னை மரங்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்க விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் குருசரஸ்வதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் தென்னை பயிா் 21,000 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் புயல் எச்சரிக்கை விடுக்கப்படும்போது புயலுக்கு முன் தென்னையில் தேங்காய், இளநீரை அறுவடை செய்ய வேண்டும். மரத்தின் கீழ் பகுதியில் உள்ள கனமான, பழைய ஓலைகளை வெட்டி அகற்ற வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து, நீா் தேங்காமல், வடிகால் ஏற்படுத்த வேண்டும்.

தண்டு பகுதியில் பூஞ்சை, பாசி வளா்வதை தடுக்க சுண்ணாம்பு அடித்தல் அவசியம். மரத்தில் தேவையின்றி உள்ள பன்னாடை, காய்ந்த மட்டை, குறும்பை ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும். மானாவாரி தோப்புகளில் ஆங்காங்கு சிறுகுழிகள் வெட்டி நீரை சேமிக்கலாம். அதிக காற்று வீசும்போது மரம் ஏறுவதை தவிா்க்க வேண்டும். நீா் பாய்ச்சுதல், ரசாயன உரமிடுவதை தவிா்த்து, இயற்கை உரமிட வேண்டும். மரங்களுக்கு காப்பீடு செய்வது சிறந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com