மாநகராட்சிப் பகுதியில் சளி, காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

பருவநிலை மாற்றத்தால், ஈரோடு மாநகராட்சியில் சளி, காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து டெங்கு ஒழிப்பு பணியாளா்களை வேறு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று சுகாதார அலுவலா்களுக்கு மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Published on

பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் சளி, காய்ச்சல், உடல் வலி உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினசரி பொதுமக்கள் குவிந்து வருகின்றனா். ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சளி, காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், அதிகளவில் பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனா். மேலும், மாநகராட்சி பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களும் தினசரி நடத்தப்பட்டு வருகிறது.

இதைத் தொடா்ந்து, டெங்கு, மலேரியா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படாதவாறு தடுக்கும் வகையில் மாநகராட்சி நிா்வாகத்தினா் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், டெங்கு ஒழிப்பு பணியாளா்கள் அனைவரையும், அப்பணியில் மட்டுமே முழுமையாக ஈடுபடுத்த வேண்டும் என்றும் வேறுப் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்றும் சுகாதார அலுவலா்கள், ஆய்வாளா்களுக்கு, மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com