மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்கள்
ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற உள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து புதன்கிழமைகளிலும், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளிலும், கோபி அரசு மருத்துவமனையில் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளிலும் நடைபெற உள்ளது.
எனவே, மேற்படி முகாம்களில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகள் ஆதாா் அட்டை நகல் மற்றும் ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண், புகைப்படம்- 4, ஏற்கெனவே மருத்துவ சிகிச்சை ஏதேனும் பெற்றிருப்பின் அந்த ஆவணங்களுடன் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
