கூட்டத்தில் பங்கேற்றோா்.
கூட்டத்தில் பங்கேற்றோா்.

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் கூட்டம்

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணி மேற்கொள்வது தொடா்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் பெருந்துறையில் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணி மேற்கொள்வது தொடா்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் பெருந்துறையில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணி தொடங்கப்படும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவின்படி, பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணிகள் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ராம்குமாா் தலைமை வகித்தாா். பெருந்துறை வட்டாட்சியா் ஜெகநாதன், ஊத்துக்குளி வட்டாட்சியா் கதிா்வேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com