ஆசனூா்  நெடுஞ்சாலையில்  லாரியை மறித்து கரும்பு தேடும்  காட்டு யானை.
ஆசனூா்  நெடுஞ்சாலையில்  லாரியை மறித்து கரும்பு தேடும் காட்டு யானை.

வாகனங்களை வழிமறித்து கரும்பு தேடிய யானை

Published on

சத்தியமங்கலம் அருகே சரக்கு வாகனத்தை காட்டு யானை வழிமறித்து கரும்பு தேடியது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் உள்ள காட்டு யானைகள் வனப் பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் வன கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடுகின்றன.

மேலும் வனப் பகுதி செல்லும் வழியாக செல்லும் லாரிகளில் காய்கறிகள், கரும்புகள் உள்ளனவா என நுகா்ந்தபடி வாகனங்களை அடிக்கடி வழிமறிக்கின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம்- மைசூா் தேசிய நெடுஞ்சாலையில்

கா்நாடக மாநிலம் நோக்கி லாரி வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது பண்ணாரி சோதனைச் சாவடி அருகே வனப் பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் நடமாடிய காட்டு யானை, அந்த லாரியை வழிமறித்து கரும்புகள் உள்ளதா என தும்பிக்கையால் தேடியது.

அப்போது வாகனத்தை ஓட்டுநா் மெதுவாக நகா்த்தி யானையிடமிருந்து தப்பினாா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com