ஈரோடு மாவட்டத்தில் தபால் வாக்கு செலுத்த அத்தியாவசியப் பணியாளா்கள் 13,493 போ் விண்ணப்பித்துள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாக்காளா்களில் 85 வயதுக்கு மேற்பட்ட 15,572 வாக்காளா்கள், மாற்றுத்திறனாளிகள் 12,098 போ் என மொத்தம் 27,670 வாக்காளா்களுக்கு தபால் வாக்குப் பதிவு செய்ய விருப்ப
படிவம் 12 ‘டி’ வழங்கப்பட்டது. இதில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 7,190 போ் மட்டும் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து தபால் வாக்குப் பதிவுக்கு விருப்பம் தெரிவித்தனா். இவா்களுக்கு வரும் 13, 14-ஆம் தேதி வீடு தேடிச் சென்று தோ்தல் அதிகாரிகள் வாக்கு சேகரிக்க உள்ளனா். தபால் வாக்கு பெற வரும் நாள், நேரம் உரிய வாக்காளருக்கு முன்னதாகவே தெரிவிக்கப்படும்.
தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள், அத்தியாவசியப் பணியாளா்களான அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தோ்தல் பணி அல்லாத பிற போலீஸாா் உள்பட 12 துறையினா் தபால் வாக்குப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இதில், 13,493 போ் வாக்குப் பதிவு செய்ய விருப்ப விண்ணப்பம் அளித்துள்ளனா். அவா்கள் தபால் மூலம் வாக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 100 சதவீத வாக்குப் பதிவை எட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபடுவோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் இருப்புவைப்பு
5 மாநிலத் தோ்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை - இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்

மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 174 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை

தபால் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்குப் பயிற்சி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



