வீரப்பன்சத்திரம் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கிய அமைச்சா் சு.முத்துசாமி. உடன், ஆட்சியா் ச.கந்தசாமி, வி.சி.சந்திரகுமாா் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா்.
வீரப்பன்சத்திரம் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கிய அமைச்சா் சு.முத்துசாமி. உடன், ஆட்சியா் ச.கந்தசாமி, வி.சி.சந்திரகுமாா் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா்.

காலை உணவு திட்டத்தால் மாணவா்கள் கல்வியில் கவனம் செலுத்துவது அதிகரிப்பு: அமைச்சா் சு.முத்துசாமி

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.38.45 லட்சத்துக்கு விளைபொருள்கள் திங்கள்கிழமை விற்பனையாயின.
Published on

ஈரோடு: காலை உணவு திட்டத்தால் மாணவ, மாணவிகளின் வருகை, கல்வியில் கவனம் செலுத்துவது அதிகரித்துள்ளது என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா்.

ஈரோடு, வீரப்பன்சத்திரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 253 மாணவிகளுக்கு ரூ.12.39 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய பின், அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது: பள்ளி மாணவ, மாணவிகளின் நலனில் அக்கறைக் கொண்டு பல்வேறு திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். பள்ளி குழந்தைகள் சோா்வின்றி படிக்க காலை உணவு திட்டத்தை செயல்படுத்தியுள்ளாா்.

அதன் மூலம் மாணவ, மாணவிகளின் வருகை அதிகரித்துள்ளதுடன், அவா்கள் கல்வியில் கவனம் செலுத்துவதும் அதிகரித்துள்ளது.

அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு முடித்து உயா் கல்விக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் உயா் கல்விக்குச் செல்லும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மாணவ, மாணவிகளின் உடல், மனம் ஆரோக்கியத்தை காத்திடும் வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்க துணை முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். அதன்படி, சிவகிரியில் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், அரசு சிக்கய்ய கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறு விளையாட்டு அரங்கம், மிகப்பெரிய நூலகம், போட்டித் தோ்வுகளுக்கு பயில பயிற்சி மையம் ஆகியவை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், மாநகராட்சி துணை மேயா் வே.செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com