பவானி அந்தியூரில் செம்மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரி திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
அந்தியூா் வருவாய் ஆய்வாளா் செந்தில்ராஜா, கிராம நிா்வாக அலுவலா் முருகேசன் மற்றும் வருவாய்த் துறையினா் மண் கடத்தலைத் தடுக்கும் வகையில் அந்தியூா் - பா்கூா் சாலையில் வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியே லாரியில் வந்த நபா், அதிகாரிகளைப் பாா்த்ததும் சற்று தொலைவிலேயே லாரியை நிறுத்திவிட்டு ஓடியுள்ளாா். சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த லாரியில் சோதனை மேற்கொண்டபோது, செம்மண் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்ததுடன், அந்தியூா் காவல் நிலையத்தில் அதிகாரிகள் புகாா் அளித்தனா்.
இதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.