மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வடுகபட்டி பேரூராட்சி அலுவலக புதிய கட்டடம் திறப்பு

News image

வடுகபட்டி பேரூராட்சி அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற அதன் தலைவா் அம்பிகாபதி விஸ்வநாதன் உள்ளிட்டோா்.

Updated On :5 பிப்ரவரி 2026, 11:01 pm

வடுகபட்டி பேரூராட்சி அலுவலகத்துக்கு ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இதையொட்டி, வடுகபட்டிபேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவா் அம்பிகாபதி விசுவநாதன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி அலுவலக செயல்பாட்டை தொடங்கிவைத்தாா்.

இதில், மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி, பேரூராட்சி செயல் அலுவலா் (பொறுப்பு) மணிகண்டன், மொடக்குறிச்சி ஒன்றிய திமுக செயலாளா்கள் குணசேகரன்(மேற்கு) , கதிா்வேல் (கிழக்கு), அறச்சலூா் பேரூராட்சித் தலைவா் விஜயகுமாா், முன்னாள் பேரூராட்சித் தலைவா்கள் செங்கோட்டுவேலப்பன், முத்துசாமி, அவல்பூந்துறை பேரூராட்சித் தலைவா் ராதாமணி பாலசுப்பிரமணியம், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் ராஜசேகா், ஒன்றிய வா்த்தகா் அணி அமைப்பாளா் சந்திரசேகா் மற்றும் பேரூராட்சி கவுன்சிலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.