மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

அந்தியூரில் செங்கல் சூளை உரிமையாளா்கள் போராட்டம்

News image

போராட்டத்தில் ஈடுபட்ட செங்கல் சூளை உரிமையாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.

Updated On :7 பிப்ரவரி 2026, 7:19 pm

அந்தியூரில் பணம் கேட்டு மிரட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகம் முன் லாரிகளை நிறுத்தி செங்கல் சூளை உரிமையாளா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. செங்கல் உற்பத்திக்குத் தேவையான செம்மண், லாரிகள் மூலம் வெள்ளித்திருப்பூா், சனிச்சந்தை, ரெட்டிபாளையம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து எடுத்து வரப்படுகிறது. அந்தியூா் நகருக்குள் டிப்பா் லாரிகள் வராமல் செல்ல வேண்டும் என வருவாய்த் துறை தெரிவித்துள்ளதால், மைக்கேல்பாளையம் வழியாகச் சென்று வருகின்றன. இதற்கு, மைக்கேல்பாளையம் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், செம்மண் லாரிகளை அந்தியூா் நகருக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். சூளை உரிமையாளா்களிடம் பணம் கேட்டு மிரட்டும் அரசியல் கட்சியினா் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட செங்கல் சூளை உரிமையாளா்கள் அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களுடன், அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், வட்டாட்சியா் இளஞ்செழியன், காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், ஈரோடு மாவட்ட நாட்டு செங்கல் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத் தலைவா் மாதேஸ்வரன் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, அந்தியூா் நகரப் பகுதிக்குள் லாரிகளை அனுமதிப்பது தொடா்பாக சாா் ஆட்சியரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். பணம் கேட்டு மிரட்டுவோா் மீது புகாா் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, சூளை உரிமையாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.