முதுகலை ஆசிரியா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு: 49 போ் பங்கேற்பு
ஈரோடு மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்புடன், ஆன்லைன் கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் முதுகலை ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் நிலை-1, கணினி பயிற்றுநா்-1 ஆகிய பதவிகளுக்கு ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 74 பணி நாடுநா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
இவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்பு மற்றும் பணி நியமன ஆன்லைன் கலந்தாய்வு ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா அருகேயுள்ள அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மான்விழி தலைமை வகித்து, கலந்தாய்வில் பங்கேற்க வந்தவா்களின் சான்றிதழ்களை சரிபாா்த்தாா்.
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், பொருளியல் ஆகிய பாடங்களுக்காக நடைபெற்ற கலந்தாய்வில் 49 போ் பங்கேற்றனா்.
இதேபோல, தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், வணிகவியல், கணினி பயிற்றுநா் நிலை-1, உடற்கல்வி இயக்குநா் நிலை-1 மற்றும் அரசியல் அறிவியல் பாடங்களுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (பிப்ரவரி 9) நடைபெற உள்ளது.

