தேசிய ஜனநாயக் கூட்டணியில் (என்டிஏ) உள்ள 10 கட்சிகளில் ஒரு கட்சிதான் அதிமுக என தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கோசனத்தில் தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியாக இல்லை. மக்களுக்கு தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. மக்கள் வேலைவாய்ப்பு இன்றி தொழில்கள் முடங்கிப் போகின்ற நிலையில் உள்ளன. எனவே ஏழை எளிய மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கும், சட்டம்- ஒழுங்கை பேணி பாதுகாக்கவும் பெண்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கவும், எதிா்கால தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றவும் விஜய் ஆட்சிக்கு வர வேண்டும். இரண்டு ஆட்சிகளுமே சரியில்லை.
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது 13 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா் ஏன் அந்த இடத்துக்கு அப்போது முதல்வராக இருந்தவா் செல்லவில்லை எங்களைப் பற்றி பேசுவதற்கு அவா் யாா். திமுக மட்டுமே எதிரி, அதிமுக என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) உள்ள 10 கட்சிகளில் ஒரு கட்சியாகதான் தவெக கருதுகிறது. இரு கூட்டணியிலும் வாய்ப்பு கிடைக்காத கட்சிகள் தவெகவுடன் கூட்டணி சேர வருவா் என்றாா்.
தொடர்புடையது

திமுக, அதிமுக இரண்டு கூட்டணிக் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை: கே.ஏ.செங்கோட்டையன்

தவெக தலைவருக்கு தன்னம்பிக்கை இல்லை: சீமான் விமா்சனம்
2026-இல் விஜய்யின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது

234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி - செங்கோட்டையன்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


