விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

அந்தியூரில் ரூ.19.31 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.19.31 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் திங்கள்கிழமை ஏலம் போனது.

Updated On :9 பிப்ரவரி 2026, 8:47 pm

பவானி: அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.19.31 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் திங்கள்கிழமை ஏலம் போனது.

இங்கு 6,074 தேங்காய்கள் கிலோ ரூ.45.50 முதல் ரூ.55.30 வரை ரூ.1,19.607-க்கும், 36 மூட்டைகள் தேங்காய் பருப்பு ரூ.174.89 முதல் ரூ.206.46 வரை ரூ.1,95,628-க்கும், 4 மூட்டைகள் உளுந்து கிலோ ரூ.81.19 முதல் ரூ.83.09 வரை ரூ.25,792-க்கும் விற்பனையாகின.

மேலும், 400 மூட்டைகள் துவரை கிலோ ரூ.85.61 முதல் ரூ.95.61 வரை ரூ.15,33,250-க்கும், 3 மூட்டைகள் ஆமணக்கு கிலோ ரூ.70.69 முதல் ரூ.82.09 வரை ரூ.8,742-க்கும் ஏலம் போனது. 3 மூட்டைகள் அவரை கிலோ ரூ.60.89 முதல் ரூ.66.69 வரை ரூ.24,726-க்கும், ஒரு மூட்டை கொள்ளு கிலோ ரூ.52.69 முதல் ரூ.54.19 வரை ரூ.2,742-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.19,31,530-க்கு வா்த்தகம் நடைபெற்றது.