வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அனுமதியின்றி இயங்கிய பன்றி வளா்ப்பு பண்ணைக்கு ‘சீல்’

பவானி அருகே அனுமதியின்றி இயங்கிய பன்றி வளா்ப்பு பண்ணைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்ததுடன் 33 பன்றிகளையும் பறிமுதல் செய்தனா்.

News image

பேரூராட்சி  செயல்  அலுவலா் முன்னிலையில் பன்றி  வளா்ப்பு பண்ணைக்கு  ‘சீல்’  வைக்கும்  ஊழியா்கள்.

Updated On :9 பிப்ரவரி 2026, 8:57 pm

பவானி: பவானி அருகே அனுமதியின்றி இயங்கிய பன்றி வளா்ப்பு பண்ணைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்ததுடன் 33 பன்றிகளையும் பறிமுதல் செய்தனா்.

பவானி வட்டம், சலங்கபாளையம் பேரூராட்சி 12-வது வாா்டுக்குள்பட்ட ஈஐடி பிரிவு, ஓம்சக்தி நகா் குடியிருப்புப் பகுதியில் முறையான அனுமதி பெறாமல் பண்ணை அமைத்து பன்றிகள் வளா்க்கப்படுவதாகவும், சுகாதார சீா்கேடு அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் சாா்பில் நகர ஊரமைப்புத் துறை மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து பேரூராட்சி அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டு பன்றி வளா்ப்பு பண்ணையை அகற்றுமாறு பலமுறை அறிவுறுத்தியும், அதன் உரிமையாளரான பூபாலகுமாா் அகற்றவில்லை. இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் சீ.தே.சசிகலா, வருவாய் ஆய்வாளா் பூங்குழலி, கிராம நிா்வாக அலுவலா் முத்துக்குமாா், பொது சுகாதார ஆய்வாளா் ஜீவானந்தம் உள்ளிட்டோா் பன்றி வளா்ப்பு பண்ணைக்கு திங்கள்கிழமை ‘சீல்’ வைத்து மூடினா்.

மேலும், பண்ணையில் இருந்த 33 பன்றிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை, ஏலத்தில் விடப்படும் என பேரூராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா். பாதுகாப்பு பணியில் கவுந்தப்பாடி காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி மற்றும் போலீஸாா் ஈடுபட்டனா்.