தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள் கைது

ஈரோடு வட்டாட்சியா் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :9 பிப்ரவரி 2026, 8:47 pm

ஈரோடு: ஈரோடு வட்டாட்சியா் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தோ்தல் கால வாக்குறுதியின்படி சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க் வேண்டும். வருவாய்த் துறை கிராம உதவியாளா்களுக்கு ரூ.15,700 அடிப்படை ஊதியம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு வட்டாட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் திரண்டு முழக்கம் எழுப்பினா்.

மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோா் சாலையில் அமா்ந்து மறியலிலும் ஈடுபட்டனா். அப்போது அவா்களை அங்கிருந்த போலீஸாா் கைது செய்தனா்.

மொத்தம் 121 போ் கைது செய்யப்பட்டதாகவும், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.