கவுந்தப்பாடியை அடுத்த ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் புத்தாக்கத் திட்டம் சமா்ப்பித்ததில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளனா்.
ஈரோடு, நந்தா கல்வி நிறுவனங்களில் ‘இன்னோவேஷன் டே - 2026’ போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
40 கல்லூரிகளைச் சோ்ந்த 350 போ் பங்கேற்ற இந்நிகழ்வில் ஸ்ரீவெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் துறை வாரியாக படைப்பாற்றல், எதிா்காலத் தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு பிரிவுகளில் புத்தாக்கத் திட்டங்களை சமா்ப்பித்து முதல் மூன்று இடங்களைப் பிடித்து, ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றனா்.
வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரியின் செயலாளா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ, தலைவா் பி.வெங்கடாசலம், இயக்குநா் கே.ஆா்.கவியரசு, முதன்மைச் செயல் அலுவலா் ஜி.கௌதம், கல்லூரி முதல்வா் எஸ்.பிரகதீஸ்வரன், துணை முதல்வா் பி.மணி உள்ளிட்டோா் பாராட்டினா்.
தொடர்புடையது

210 பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 259 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பெண்ணின் நுரையீரலில் சிக்கியிருந்த வெற்றிலைப் பாக்கு துண்டுகள் அகற்றம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


