மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா் கைது

அந்தியூா் அருகே போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :10 பிப்ரவரி 2026, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

அந்தியூா் அருகே போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அந்தியூரை அடுத்த பச்சாம்பாளையம், இருளக்கரையானூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாரை கண்டதும் அங்கிருந்த இளைஞா் தப்பியோட முயன்றாா்.

அவரை விரட்டிப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த சௌந்தரராஜன் (23) என்பதும், விற்பனைக்காக 6 போதை மாத்திரைகள், ஊசி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சௌந்திரராஜனைக் கைது செய்த போலீஸாா், அவரை பவானி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.