வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அந்தியூரில் அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

அந்தியூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 175 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி புதன்கிழமை வழங்கப்பட்டது.

News image
விலையில்லா மடிக்கணினிகள் பெற்ற மாணவியருடன் அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், முதல்வா் விமலாதேவி, பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள் உள்ளிட்டோா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

அந்தியூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 175 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி புதன்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் விமலாதேவி தலைமை வகித்தாா். அந்தியூா் பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் இக்கல்லூரியில் பயிலும் 175 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினாா்.

இதில், திமுக பேரூா் செயலாளா் காளிதாஸ், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சீனிவாசன், உடற்கல்வி ஆசிரியா் திருமாவளவன், பேரூராட்சி கவுன்சிலா்கள் சேகா், கவிதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.