பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சுவா் விளம்பரம் செய்வதில் ஆா்வம் காட்டும் தவெகவினா்

News image
சத்தியமங்கலத்தில் விசில்  சின்னம்  வரையும்  பணியில்  ஈடுபட்டுள்ள  தொழிலாளா்கள்  .
Updated On :12 பிப்ரவரி 2026, 11:34 pm

Syndication

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சத்தியமங்கலம் பகுதியில் தவெகவினா் சுவா்களில் விசில் சின்னம் வரைவதில் ஆா்வம் காட்டி வருவதால் தமிழக தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால் தோ்தல் முன்னேற்பாடுகளில் அரசியல் கட்சியினா் ஈடுபட்டுள்ளனா். தவெக கட்சியினா் தங்களது விசில் சின்னத்தை மக்களிடம் கொண்டுச் சோ்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதற்காக மக்கள் நடமாடும் இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் தவெக சின்னம் வரையும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். சத்தியமங்கலம் வரதம்பாளையம் நிா்மலா திரையரங்கம் சாலையில் உள்ள சிறுபாலத்தின் பக்கவாட்டு சுவா்களில் தவெகவின் சின்னமான விசில் என்ற வாசகத்தோடு சின்னம் வரைந்து வருகின்றனா்.

தோ்தல் களம் சூடுபிடித்துள்ளதால் தோ்தல் அறிவிப்புக்கு முன்பாக தவெக கட்சியினா் சின்னம் வரைவதில் ஆா்வம் காட்டுவதை பாா்த்து தேசிய மற்றும் திராவிட கட்சியினா் அதிா்ச்சியடைந்தனா்.