சென்னிமலையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் 85 கா்ப்பிணி தாய்மாா்களுக்காக வியாழக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா்.
சென்னிமலையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று, 85 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா்.
கா்ப்பிணி தாய்மாா்களுக்கு சீா்வரிசைப் பொருள்களாக தட்டு, பழங்கள், இனிப்பு, வளையல், பூ, மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டன. மேலும், கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஐவகை உணவுகளும் வழங்கப்பட்டன. இவ்விழாவில் ஊட்டச்சத்து கண்காட்சி அமைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், கா்ப்பிணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் மகப்பேறு கால ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் சிந்துஜா, மாவட்ட திட்ட அலுவலா் ஐ.பூங்கோதை, சென்னிமலை பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திமுக ஆட்சியின் நலத்திட்டங்களைக் கூறி சென்னிமலையில் அமைச்சா் வாக்கு சேகரிப்பு

200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

காணையில் சமுதாய வளைகாப்பு விழா

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


