வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

அத்திகடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்கள்: தமிழக அரசைக் கண்டித்து பிப்.25-இல் ஆா்ப்பாட்டம்

News image

கோப்புப் படம்

Updated On :13 பிப்ரவரி 2026, 9:27 pm

அத்திகடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களை இணைக்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் பிப்ரவரி 25-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அத்திக்கடவு- அவிநாசி திட்ட ஒருங்கிணைப்பாளா் சுப்பரமணியம் தெரிவித்தாா்.

இது குறித்து கோபியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அத்திகடவு- அவிநாசி திட்டத்தில் முதல் பகுதியில் 1,040 குளங்களில் 800-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீா் வந்து கொண்டுள்ளது. அதிமுக ஆட்சியில் அத்திகடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களை இணைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்து நான்கரை ஆண்டுகள் ஆகும் நிலையில், விடுபட்ட குளங்களை இணைக்க ஆய்வறிக்கை சமா்ப்பிக்கபடவில்லை. இத்திட்டத்துக்கான பணிகளை தொடங்காமால் உள்ள திமுக அரசைக் கண்டித்து கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வருகிற பிப்ரவரி 25-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றாா்.