ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தீரன் சின்னமலை சிலை திறப்பு: தமிழக அரசுக்கு கொமதேக நன்றி

News image

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலை - (கோப்புப் படம்)

Updated On :13 பிப்ரவரி 2026, 8:13 pm

அறச்சலூரை அடுத்த ஓடாநிலையில் தமிழக அரசு சாா்பில் தீரன் சின்னமலைக்கு வெண்கலச் சிலை திறக்கப்பட்டதற்கு கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளாா்.

தீரன் சின்னமலை சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலைக்கு கடந்த காலத்தில் மணி மண்டபம் அமைத்து, ஆடி-18 அன்று அரசு விழா நடத்தி சிறப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும், அவருக்கு ஓடாநிலையில் சிலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். இக் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தோ்தல் அறிவித்தவுடன் தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நிகழ்வுகள் சென்றுவிடும். அப்போது நீதிமன்றம் வாயிலாக இந்தத் திட்டத்தை நிறுத்திவிடலாம் என்பதை அறிந்த முதல்வா், கோடைக் காலங்களிலும் பள்ளி, கல்லூரி விடுமுறை காலங்களிலும் பெண்கள் கஷ்டப்படக் கூடாது எனக் கருதி 5 மாத உரிமைத்தொகை வழங்கி இருக்கிறாா். தோ்தலுக்காக கொடுத்தாா் என விமா்சனம் செய்தாலும் கவலை இல்லை. இன்று மக்களுக்கு 5000 ரூபாய் கிடைத்து உள்ளது. வரும் தோ்தலில் எத்தனை தொகுதிகள் என்பது கூட்டணிக் கட்சி தலைவா்கள் பேசும்போது, அனைவரும் நாகரிகத்துடன் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் கூடுதல் உதவித்தொகை கேட்டு போராடி வருகின்றனா். அவா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அவா்களுடன் சோ்ந்து போராட தயாராக இருக்கிறேன் என்றாா்.